யாழ்ப்பாணம்,  வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 2 கிலோ   80 கிரேம் நிறையுடைய  ஹெரோயின் போதைப்பொருள் பார்சல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல்களுக்கு அமைவாகவே மேற்படி இரண்டு பார்சல்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

  மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.