அத்­த­ன­கல்லை கித்­தம்­ம­ஹர போனெ­கலை வழி­யாக அத்­த­ன­கலு ஓய மீது நிர்­மா­ணிக்­கப்­பட்ட  பால­மொன்றை திறந்து வைப்­ப­தற்­காக சென்ற முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எதி­ராக நேற்று பொது­மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யுள்­ளனர்.

முந்­தைய அர­சாங்­கத்தின் கீழேயே இந்த பாலத்தின் நிர்­மா­ணப்­ப­ணிகள் ஆரம்­பிக்­கப்­பட்ட அதே­வேளை, தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­களால் திறந்து வைப்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே பொது­மக்கள் இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்தப் பால­மா­னது, அண்­மையில் மேல்­மா­காண மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உபுல் மஹேந்­திர ராஜபக் ஷ மற்றும் அத்­த­ன­கல்ல பிர­தேச சபைத் தலைவர் பிரி­யந்த புஷ்­ப­கு­மார ஆகி­யோரின் தலை­மையில் திறந்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும், நேற்­றைய தினம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­க­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்­து­வைக்­கப்­ப­ட­வி­ருந்­தது.

இதைத் தெரிந்­து­கொண்ட மக்கள் குறித்த பகு­தியில் ஒன்­று­கூடி அங்கு வந்­தி­ருந்த அமைச்­சர்­க­ளான லசந்த அழ­கி­ய­வண்ண, பைஸர் முஸ்­தபா மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ருக்­கெ­தி­ராக கூச்­ச­லிட்டும் இடை­ம­றித்தும் தமது எதிர்ப்­பு­களைக் காட்­டினர்.

இந்த எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும் இந்த பாலம் திறந்து வைக்கும் வைபவம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவின் தலைமையில் இடம்பெற்று முடிந்தது.

வைபவம் முடிந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அங்கிருந்து வெளியேறியவுடன் அங்கு கூடியிருந்த மக்களும் அகன்று சென்றனர்.