நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற 25 இளைஞர்கள் ஒருதொகை கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர்களிடமிருந்து 45200 மில்லிகிரேம் கேரளகஞ்சா மற்றும் 271 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் காலி, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரையும் .இன்று ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.