மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் சற்றுமுன் வாக்கெடுப்பு  ஆரம்பமானது.. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகின்றார்.

இன்று நடைபெறும் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்குக் கட்சி வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியது. எனினும், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை காரணமாக, எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதென சரியாக கணிப்பிட முடியாதுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.