மின்னேரியா, கிரித்தலே வாவில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணால்போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

மினுவாங்கொடை பிரதேசத்திலிருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று நேற்றுமுன்தினம் கிரத்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது குறித்த இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து நீரில்  மூழ்கியவர்களை பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையிலேயே நேற்று இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

45 வயதையுடைய தந்தையும் 14 வயதையுடைய தந்தையும் மகளுமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், தந்தை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவிதுள்ளனர்.