(நா.தினுஷா) 

அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு தேவையானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.  

அதேபோன்று புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்படுமானால் ஒருபோதும் அது நாட்டின் சமாதானத்திற்கு பங்கமாக அமையாது என சுற்றுசூழல் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற ஊழல் எதிர்ப்புக்குழுவின் தலைவருமான அஜித்  மன்னப்பெரும  தெரிவித்தார். 

மேலும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற ஊழல் எதிர்ப்பு குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்குமானால் அவர்களுக்கான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம்  மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், பயங்கரவாத தடைச்சட்டம் இதுவரையும் நீக்கப்படாமல் உள்ளமைக்கான காரணம் தொடரபில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.