ஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபை கூட்டத் தொடர் மற்றும் அரச வைபவங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன் அமெரிக்கா பயணமாகினார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல்: அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்” 

என்ற கருப்பொருளின் கீழ் ஐ. நா பொதுச் சபையின் 73 வது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் பிரதான கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதேநேரம் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உலக தலைவர்களுடனும் ஜனாதிபதி  கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடனும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.