சிவராஜ் ரவிசாந்தன் 

 

''எப்­பொருள் யார்­யார்வாய்க் கேட்­பினும் அப்­பொ­ருள் ­மெய்ப் ­பொருள் காண்­ப­த­றிவு'' என்­பது திருக்­கு­ற­ளாகும்.எப்­பொ­ருளை யார் யார் இடம் கேட்­டாலும் (கேட்­ட­வாறே கொள்­ளாமல்) அப் பொருளின் உண்மையான பொருளைக் காண்­பதே அறி­வாகும் என்­பது இதன் பொரு­ளாகும். நாம் கேள்­விப்­ப­டு­கின்ற அல்­லது நமக்கு கிடைக்­கின்ற எந்த செய்­தி­யையும் நாம் அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­ளாது அதன் உண்மைத் தன்மை, நம்­பகத் தன்மை உள்­ளிட்­ட­வற்றை ஆராய்ந்து பார்த்த பின்­ன­ரேயே அதனை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என இந்த குறள் எடுத்துக் காட்­டு­கின்­றது.

ஏனெனில் நாம் கேள்­விப்­படும் அத்­தனை விட­யங்­க­ளையும் அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­வதால் ஏற்­படும் விப­ரீதம் பார­தூ­ர­மா­னது. இதற்கு சிறந்த உதா­ரணம் வடமேல் மாகா­ணத்தில் குளி­யா­ப்பிட்­டி எனும் பிரதேசத்தில் எச்.ஐ.வி.தொற்­றுக்கு உள்­ளா­னவர் என்ற வதந்­திக்கு உள்­ளான 6 வயது சிறு­வனை மனி­த­ாபி­மா­னத்­துக்கு அப்பால் சென்று ஒரு ஊரே தண்­டித்­த­மை­யாகும்.

இன்று உலக நாடு­க­ளி­டையே வியா­பித்து காணப்­படும் தொழி­ல் நுட்­ப வளர்ச்சின் கீழ் மனி­தர்­களை நோய்­க­ளா­னது ஆட்டிப் படைக்­கின்­றன. அந்­த­வ­கையில் எச்.ஐ.வி என குறிப்­பி­டப்­படும் எயிட்ஸ் என்ற பாலியல் நோயின் தாக்கம் தொடர்பில் உலக சுகா­தார ஸ்தாபனம் முழு உல­கத்­தி­னையும் தெளி

வுப்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது. எனினும் இந்த நோயி னால் பாதிக்­க­ப்படும் ஒருவர் சமூ­கத்­தி­லி­ருந்து முற்று முழு­வ­து­மாக புறந்­தள்­ளப்­ப­டு­கின்றார். இந்­நோய்த்­தாக்­கத்­துக்கு ஆளாகும் ஒரு குடும்­பத்­தில்தாய், தந்தை அல்­லது குடும்ப அங்­கத்­த­வர்­களில் எவ­ரா­வது பாதிக்­கப்­படும் தரு­ணத்தில் அந்த குடும்­பத்தின் எதிர்­கால சந்­த­தி

யினர் பாதிக்­கப்­ப­டு­வ­தோடு மறு­புறம் அவற் றின் உண்­மைத்­தன்­மை­யினை அறி­யாது அவர்­களை எமது சமூகம் பல்­வேறு ரீதியில் புறந்­தள்­ளு­கின்­றது. இது வழ­மை­யாக உலக நாடுகள் உட்­பட எமது நாட்­டில்­உண்­மை­யான எயிட்ஸ் தொற்­றுக்­குள்­ளான ஒரு­வ­ருக்கும் அவ ரின் பரம்­ப­ரைக்கும் நேரும் கொடு­மை­யான நிலை­மை­யாகும்.

எனி­னும்­எவ்­வித எயிட்ஸ் தொற்றும் இல்­லாத ஒரு­வரை எயிட்ஸ் உள்­ள­தாகக் கூறி ஒரு ஊரே ஒதுக்கி வைப்­பதும் அவரை மன­த­ளவில் காயப்­ப­டுத்­துவது­மான செயல்­களை வார்த்­தை­களால் வர்­ணிக்க முடி­யாத கொடூ­ர­மான துர­திஷ்டம் என்றே கூற­வேண்டும்.

தந்தி போல் வேக­மாக செல்லும் வதந்தி என்று சொல்­வார்கள். ஆம் அது உண்­மைதான் போலும். வட­மேல் மா­க­ாணத்தின் குளி­யாப்­பிட்­டி பிர­தே­சத்­தி­லி­ருந்து பத்து கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள அந்த கிரா­மத்தில் வசிக்கும் சிறு­வனே ருத்ரன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). ஆறு வய­து­டைய இந்த சிறுவன் தனது எதிர்­கால இலட்­சியங்­களின் மத்­தியில் கல்வி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க ஆரம்­பிக்கும் சந்­தர்ப்­பத்­தி­லேயே முழு நாடும் ஒரு கணம் எயிட்ஸ் பற்றி பேசத் தொடங்­கி­யது.

ஆம்! ­கா­ரணம் இருக்­கின்­றது. இந்த சிறு­வனின் தந்தை கொடூர நோய் ஒன்றின் தாக்கம் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்ளார். இந் நிலையில் அந்த ஊரார் சிறு­வனின் தந்தை எச்.ஐ.வி.தொற்­றினால் பாதி­க்கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக கதை­ய­ளக்க ஆரம்­பித்தனர். வாய்க்கு வாய் மாறிய கதை­யா­னது இறு­தியில் சிறு­வனின் தாய்க்கும் எச்.ஐ.வி. தொற்று உள்­ள­தா­கவும் சிறு­வ­னுக்கும் அந்த தொற்று தொற்­றிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் கதைகள் ஊருக்குள் உலா வந்­தன. அது தான் தந்­தியை விட வேக­மாக பர­விய அந்த வதந்தி.

இந் நிலையில் 6 வயதை அடைந்த சிறு­வனை அவன் தாய் கல்வி செயற்­பா­டு­க­ளுக்­காக குளி­யாப்­பிட்­டி பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்­றில்­சேர்க்க முயன்­றுள்ளார். எனினும் ஊருக்குள் பர­விய எயிட்ஸ் வதந்­தியால் அந்த பாட­சாலை அச்­சி­று­வனை சேர்த்­துக்­கொள்ள மறுத்­தது. இதனைத் தொடர்ந்து முயற்­சியைக் கைவி­டாத அச்­சி­று­வனின் தாய் போராட்­டங்கள் பல நடத்தி ஒரு­வாறு ஒரு பாட­சா­லையில் அச்­சி­று­வனை சேர்த்தார்.

அந்தச் சிறு­வனின் தந்தை எச்­.ஐ.வி தொற்­றுக்கு உள்­ளாகி உயி­ரி­ழந்­த­தாக உள்­ளூரில் வதந்தி பர­வி­யி­ருந்த நிலையில், அவரை சேர்த்­துக்­கொள்ள எந்தப் பள்­ளிக்­கூ­டமும் முன்­வந்­தி­ருக்­காத நிலையில், கல்வி அதி­கா­ரி­களின் தலை­யீட்டால் பள்­ளிக்­கூடம் ஒன்று அவரை சேர்த்­தமை ஆறுதல் அளித்­தது.

எனினும் அந்த சிறு­வனை பாட­சா­லை­யி­லி­ருந்து உட­ன­டி­யாக வெளியேற்­று­மாறும் பாட­சாலை அதி­ப­ருக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கித்து ஆர்ப்­பாட்­டங்­களை அப்­பி­ர­தேச மக்கள் முன்­னெ­டுக்க அதி­லி­ருந்து தொடர்ந்து தலை­யிடி ஆரம்­பித்­தது.

இத­னி­டையே வலய கல்வி, கல்வி அமைச்சு உட்­பட சுகா­தார அமைச்சு ஒன்­றி­ணைந்து சிறு­வ­னுக்கும், தாய்க்கும் எச்.ஐ.வி பரி­சோ­த­னை­யினை முன்­னெ­டுக்க அதில் கிடைக்­கப்­பெற்ற அறிக்கை மூலம் இரு­வ­ருக்கும் எச்.ஐ.வி தொற்று இல்லை என ஊர்­ஜித­மா­னது.

இவ்­வா­றான நிலையில் மீண்டும் தனது மகன் பாட­சா­லையில் கல்விச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க தயாராக முயற்­சித்த தரு­ணத்தில் மீண்டும் ஏனைய மாண­வர்­களின் பெற்­றோ­ரினால் கடும் எதிர்ப்­புக்கள் எழுந்­த­தோடு தொடர்ச்­சி­யாக அந்த கிரா­மத்தில் மேற்­படி பிரச்­சினை­யா­னது வலுவ­டைந்­து சென்­றது.

வடமேல் மாகாண கல்வி

அமைச்சின் தலை­யீடு

இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்­திய வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்­தியா ராஜ­பக் ஷ கிராம மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­டவும் சுகா­தார அமைச்­சுடன் இணைந்து எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் மக்­களை தெளிவு­ப­டுத்தும் முக­மாகவும் சில செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்தார்.

குறித்த சிறு­வ­னுக்கு எச்.ஐ.வி. தொற்று தொடர்­பி­லான சோத­னை­கள் செய்­யப்­பட்­ட­தோடு இரு­வ­ருக்கும் இதில் எவ்­வித பாதிப்­புக்­க­ளு­மில்லை என சில விட­யங்­களை தெளி

வுப்­ப­டுத்­திய போதும்­அந்த கிராம மக்­களின் கருத்­து­க­ளிலும் கோரிக்­கை­க­ளிலும் எவ்­வித மாற்­றத்தையும் காண முடி­யா­மையின் கார­ண­மாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் குறித்த மாணவன் பெற்­றோரின் கடு­மை­யான எதிர்ப்­பு­களின் மத்­தியில் இப்­பா­ட­சா­லையில் கல்வி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் மன­த­ளவில் பாதிக்­கப்­ப­டு­வ­தோடு இச்­செ­யற்­பாடு மேலும் சில பிரச்­சி­னை­க­ளுக்கு வித்­திடும் என்ற கார­ணத்­தினால் மாண­வனை பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­ய­தோடு பிறி­தொரு பாட­சா­லை­யினை பெற்­று­த­ரு­வ­தற்கும் தாயா­ரிடம் வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

விரக்­தி­ய­டைந்த குடும்­பத்தை தேடிச் சென்ற பிர­தி­ய­மைச்சர்

இவ்­வாறு கிராம மக்­க­ளி­டையே காணப்­பட்ட தெளிவின்மை சுய­நல போக்கின் அடி­ப்ப­டையில் பாதிக்­கப்­பட்ட சிறு­வனை பிர­தி­ய­மைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க நேரில் சென்று பார்­வை­யிட்­ட­தோடு அத்­துடன் குற் றம் சாட்­டப்­பட்ட சிறு­வ­னுக்கு எது­வு­மில்லை எனவும் அவ­ருடன் அனை­வரும் வழமை போலவே பழ­கும்­படி கூறி பிர­தி­ய­மைச்சர் சிறு­வனை தன்­னுடன் அணைத்துக் கொண்டு சிறு­வ­னுடன் சில மணித்­தி­யா­லங்கள் தனது காலத்­தினை கடத்­தி­யது பல­

ருக்கும் நெகிழ்ச்­சியை வர­வ­ழைத்தது.

மறு­புறம் அக்­கி­ராம வாசி­க­ளுக்கு எயிட்ஸ் தொடர்­பான தெளிவினை வழங்க பிர­தி­ய­மைச்சர் முற்­பட்ட வேளை கிரா­ம­வா­சி­க­ளி­னால்­பல்­வேறு விமர்­ச­னத்­திற்­கும்­அவர் உள்­ளானார்.

ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து வந்த

தொலை பேசி அழைப்பு

பிர­தி­ய­மைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க பாதிக்­கப்­பட்ட சிறுவன் உட்­பட அவரின் தாயை சந்­தித்த சந்­தர்ப்­பத்தில் தனது தொலை பேசி மூலம்­ஜ­னா­தி­ப­திக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்தி தாயிடம் கொடுத்­துள்ளார். இதன் போது தனது பிள்­ளைக்கு பாட­சாலை ஒன்றை பெற்­று­த­ரு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் தாயார் கண்­ணீர்­மல்க கோரிக்கை விடுத்தால் இதன்போது பதிலளித்த ஜனாதிபதி உங்­க­ளது குடும்­பத்­திற்கு

எவ்­வித தொந்­த­ர­வு­களும் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ ம­ளிக்­கப்­போ­வது இல்லை. உரிய பாட­சா­லை யும் பெற்று கொடுக்­கப்­படும் என உறு­தி­யளித்தார்.

பிர­தி­ய­மைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க ஆரம்­பத்­தி­லி­ருந்தே இந்த சிறு­வனின் சம்­பவம் தொடர்பில் தலை­யிட்­ட­தோடு இவ்­வா­றான விட­யங்கள் நாட­ளா­விய ரீதியில் நடை­பெறும் சந்­தர்ப்­பங்­களில் இவரின் தலை­யீடு கட்­டா­ய­மாக இருப்­பது தொடர்பில் கடந்­த­கா­லங்­க­ளில்­ஊ­ட­கங்­களில் அவ­தா­னிக்க முடிந்­த­மை­யா­னது வர­வேற்­கத்­தக்­கது என்றே குறிப்­பிட வேண்டும்.

உயர் நீதி­மன்றில் அடிப்­படை

உரிமை மீறல் மனு

தனது மகன் எச்.ஐ.வி. நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மா­கவும் தனது மகனின் கல்வி உரி­மையை பாது­காக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் தாயார் கொழும்பு உயர் நீதி மன்றில் அடி­ப்படை

உரிமை மீறல் மனு­வொன்றை தாக்கல் செய்தார். அத்­துடன் கல்வி அமைச்சர், குளி­யாப்­பிட்­டிய வலயக் கல்வி பணிப்­பாளர் உள்­ளிட்­ட­வர்­க­ளையும் இந்த மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக பெயரிட்டிருந்தார்.

பிர­த­மரின் உத்­த­ரவு

பாதிக்­கப்­பட்ட சிறுவன் தொடர்பில் பல்­வேறு செய்­திகள் ஊட­கங்­க­ளிலும் பத்­தி­ரி கை­க­ளிலும் தொடர்ச்­சி­யாக வெளிவர இது தொடர்பில் கவனம் செலுத்­திய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்வி அமைச்சர் அ­கி­ல­விராஜ் காரி­ய­வ­சத்­திற்கு இது தொடர்­பில்­அ­றிக்­கை­யொன்றை வெளியிட்டார். அதில் பாதிக்

கப்­பட்ட சிறு­வ­னுக்கு நாட்டின் எந்­த­வொரு பாட­சா­லை­யிலும் அனு­ம­தி­யினை பெற்­றுக்­கொள்ள அனு­மதி வழங்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

அன்­றைய தினமே இது தொடர்பில் துரி­த­மாக நட­வ­டிக்கை எடுத்த கல்வி அமைச்சர் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு பாட­சா­லை­யொன்றை பெற்­று­க்கொ­டுப்­ப­தோடு வீடொன்­றையும் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கைகொடுத்த கண்டி திருத்துவ கல்லூரி

பிரதமரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகள் குறித்த

சிறுவனை தமது பாடசாலையில் சேர்த்துக்

கொள்ள விரும்பின. எனினும் முந்திக்கொண்ட கண்டி திருத்துவ கல்லூரி உடனடியாக இது

விடயமாக கல்வி அமைச்சர் அகில

விராஜ் காரியவசத்துடன் பேச்சுக்களை நடத்தியது. அதன் பலனாக கல்வி அமைச்சருக்

கும் திருத்துவ கல்லூரி அதிபருக்கும் இடை

யிலே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்

றும் கைச்சாத்தானது. இந்நிலையில் குளியாபிட்டியை சேர்ந்த அந்த சிறுவனின் கல்விக் கனவு நனவாகும் சூழல்

மீண்டும் உருவாக்கப்பட்டது. சிறுவனின் கல்வி நடவடிக்கை நிறைவுறும் வரை அது தொடர்பிலான பூரண செலவினங்களை ஏற்றுக் கொள்ளவும் கல்வி அமைச்சு முன் வந்துள்ளது. இதனை விட சிறுவனின் தாய்க்கு கண்டி பகுதியில் வீடொன்றை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குளியாப்பிட்டி வதந்தியொன் றினால் தோற்கடிக்கப்பட்ட மனிதாபிமானம் கண்டியில் வெற்றி பெற்றுவிட்டது.