நாம் இருக்கின்ற போது எதனை சாதிக்க வேண்டும் அதனை சாதிக்க வேண்டும் எனக்கு மத்திய மாகாணத்தில் அமைச்சு பதவி கிடைத்து மூன்று வருடங்கள் தான் ஆகின்றது. அந்த காலப்பகுதியில் எமது மக்களுக்கு என்ன தேவை அது  அத்தனையும் செய்து கொடுத்துள்ளோம்.நாங்கள் அதை செய்திருக்கலாம் இதை செய்திருக்கலாம் என்று கூறாது எமக்கு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் சாதித்து காட்ட வேண்டும்.

அதனை தான் இன்று நாங்கள் மத்திய மாகாணத்தில் செய்து காட்டியுள்ளோம். பாடசாலை மாணவர்களுக்கும் எமது சமூகத்திற்கு தமது திறமைகளை வெளிகொண்டு வருவதற்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும்.

 என்பதற்காக தான் மத்திய  மாகாண சாகித்ய விழாவினை முன்னெடுத்து வருகின்றோம். மலையகத்தின் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் கண்ட கனவு இன்று நனவாகின்றது.

இன்று இங்கு வருகை தந்த முதலமைச்சர் அவர்களும், இந்திய தூதுவரும் இவ்வாறு பிரமாண்டமான சாகித்ய விழாவினை காணவில்லை என்றார். இதை தான் நாங்கள் எதிர்ப்பார்பது எமது மக்களின் கலை, கலாசாரங்களை பேணி பாதுகாக்கின்ற ஒரு நிலை  உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி விவசாயம் மீன்பிடி இந்து கலாசாரம் பதில் முதலமைச்சர் எம். ரமேஸ்வரன் தெரிவித்தார்.

மத்திய மாகாண சாகித்ய விழாவில் இன்று காலை அட்டன் மல்லியைப்பூ சந்தியில் ஆரம்பமானது. அதில் மலையக மற்றும் கலை, கலாசாரங்களை பிரதி பலிக்கின்ற வகையில் அலங்கார ஊர்திகள், நடன நாடக நிகழ்வுகள், எதிர்கால சிந்தனை உள்ளடக்கியதாக (தேயிலை வளர்நாடு கண்டோம் ஏற்றமிகு வாழ் காண்போம்) எனும் தொனி பொருளில் மத்திய மாகாண தமிழ் சாகித்யவிழா 2018 பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கலைகலாசார அம்சங்களுடன் நிகழ்வுகள் இரண்டு அரங்குகள் இடம்பெற்றது.இதில் முதல் அரங்கு பாடசாலை மாணவர்களினதும், இரண்டாம் அமர்வு மலையக கலைஞர்களின் கலை நிகழ்வுககள் உள்ளடங்களாக இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இதில் பல்வேறு துறைகளில் சேவை செய்தவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் ஊடகம், கலை, நிர்வாகம், வர்த்தகம் ஆகிய துறைளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஆளுநர் பி.பீ திசாநாயக்க, இந்திய உதவி தூதுவர் கண்டி திரேந்திர சிங், எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் கல்வி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.