(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்த பாய ராஜபக்ஷ ஆகியோரை படு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பிலான விசாரணைகள் குறித்து பிரதமர் ரணில்விக்ரமசிங்க அறிக்கையினைக் கோரியுள்ளதுடன், தொலைபேசி அழைப்பு தொடர்பான விபரங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயளாலரை படுகொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்பிக்குமாறு சட்ட ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.