வெள்ளைக் கொடி விவகாரத்தில் என்னை குற்றவாளியாக்க முயற்சி  : லசந்த   படுகொலை தொடர்பில் முதலில்   விசா­ர­ணைகள்  செய்யுங்கள்

Published By: MD.Lucias

12 Mar, 2016 | 11:42 AM
image

 

வெள்ளைக் கொடி விவ­கா­ரத்தில் என்னை குற்­ற­வா­ளி­யாக சித்­த­ரித்து அவ்­வி­டயம் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் என்று அமைச்சர் சரத்­பொன்­சேகா கூறு­கின்றார். அதனை செய்­வ­தற்கு முன்­ப­தாக ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கிர­ம­துங்­கவின் படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ வேண்­டுகோள் விடுத்தார்.

முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தின் போது இயங்­கி­வந்த ரக்னா லங்கா ஆயுதக் களஞ்­சிய நிறு­வ­னத்தின் ஊழல், மோச­டிகள் தொடர்பில் பாரிய ஊழல் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தற்கு நேற்று வெள்­ளிக்­கி­ழமை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டப கட்­ட­டத்­தொ­கு­திக்கு வருகை தந்­தி­ருந்த வேளை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­ப­ப்பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே கோத்­த­பாய ராஜ­பக் ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்;

வெள்ளைக் கொடி விவ­காரம் தொடர்பில் உண்­மையைக் கண்­ட­றிய வேண்டும். முறை­யான சட்­ட­திட்­டங்­களை பின்­பற்­றியே யுத்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். அந்­த­வ­கையில் யுத்­தக்­குற்­றச்­சாட்­டு­களை பின்­பற்­றிய­வர்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும் என அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான கருத்­துக்­களை இவர் முன்­வைப்­பது புதிய விட­ய­மல்ல அண்­மையில் அமெ­ரிக்­கா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்ட தரு­ணத்­திலும் இவற்­றையே வலி­யு­றுத்­தினார். வெள்ளைக் கொடி விவ­கா­ரத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி அமைச்சர் சரத் பொன்­சேகா என்னை குற்­ற­வா­ளி­யாக சித்­த­ரிக்­கவே இவ்­வா­றான கருத்­து­க்களை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் தெரி­வித்து வரு­கின்றார்.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முன்னர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நான் அரசிடம் விடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20