மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வெளிநாடு செல்லவுள்ளமையால் நாளை முதல் மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் கடமையாற்றவுள்ளார்.

குறித்த அறிவிப்பை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இன்று மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.