(எம்.மனோசித்ரா)

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகா விடின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வெற்றிக்கிடைக்காது என  தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி , நல்லாட்சியின் சில தீர்மானங்கள்  மிகவும் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். 

அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்கள் நால்வரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளமை குறித்து வினவுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,

 தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து நீக்கியது தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சுதந்திர கட்சியால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்கள் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளது. 

காரணம் இதனால் பொது மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.