ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளது இதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

‘அ.தி.மு.க அரசு மீது குற்றம்சாட்டுவதையே தி.மு.க தலைவர் ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார்.

ஊழல் குறித்து பேச தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதி கிடையாது. தி.மு.க பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது. இதற்காக ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். 

என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாசுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சிற்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? 

ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. அதனை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான். திறக்கப்படும் என்ற பேச்சிற்கே இடமில்லை.’ என்றார்.