பாரா­ளு­மன்­றத்தில் என்னைத் தொடர்­பு­ப­டுத்தி முன்னாள் இரா­ணுவத் தள­பதி பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத்­பொனசேகா கூறிய விட­யங்கள் உண்­மைக்குப் புறம்­பா­னவை. அதில் எந்­த­வி­த­மான உண்­மைத்­தன்­மையும் கிடை­யாது. சரத்­ பொனசே­காவால் கூறப்­பட்­டவை முற்­றிலும் பொய்­யான கூற்­றுக்கள். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­த­தாக நான் ஒரு­போதும் சரத்­பொன்­சே­கா­விடம் கூறி­யி­ருக்­க­வில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் சரத்­பொன்சேகா நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­ய­போது, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு அமைச் சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ உள்­ளிட்டோர் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

இதில் தமக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். பஷில் ராஜ­பக் ஷ மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

2005 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெற்றி பெறு­வ­தற்கு விடு­தலைப் புலிகள் அமைப்­புக்கு பணம் கொடுத்­த­தாக நான் ஒரு­போதும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் கூறி­யி­ருக்­க­வில்லை. அர­சியல் இலாபம் கரு­திய வகையில் சரத்­பொன்­சே­காவின் குற்­றச்­சாட்­டுக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

பொன்­சே­காவால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைக்கு புறம்­பா­னவை . அவை முற்­றிலும் பொய்­யா­னவை. அவர் கூறு­வது போன்று எந்­த­வொரு சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. அது­மாத்­தி­ர­மன்றி புலி­க­ளுக்கு பணம் கொடுத்­த­தா­கவும் அதனை நான் பொன்­சே­கா­விடம் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­கின்ற கதை பொய்­யா­னது. அவ்­வாறு எந்த விட­யத்­தையும் அவ­ரிடம் நான் கூற­வில்லை.

சரத்­பொன்­சே­காவின் இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் அவ­ரது சொந்த கருத்­துக்கு அமைய கூறிய விட­ய­மல்ல. நீண்­ட­கால இலக்கு ஒன்றை குறி­வைத்து மேற்­கொள்­ளப்­படும் அர­சியல் வேட்­டை­யாடல் நட­வ­டிக்­கை­யா­கவே இதனை என்ன முடி­கி­றது.

இதே­வேளை புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட தங்­கத்தை மீண்டும் மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நட­வ­டிக்­கைக்கும் எனக்கும் எந்த சம்­பந்­தமும் இல்லை என்­பதால் அது பற்­றிய மேல­திக தக­வல்கள் எனக்கு தெரியாது.

ராஜபக் ஷ அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில், கூட்டுப் பொறுப்பின் அடிப்படை யில்,பொன்சேகாவின் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். தங்கத்தை மீண்டும் வழங் கியமை தொடர்பில் தேவையெனில் விசாரணைகளை நடத்துவதில் எவ்வித தவறையும் தான் காணவில்லை எனத் தெரிவித் துள்ளார்.