‘நோட்டா ’  என்ற படம்  ஒக்டோபர் 5 ஆம் திகதியன்று வெளியாகிறது.

 அரிமாநம்பி, இருமுகன் என்ற இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நோட்டா என்ற புதிய திரைப்படம் ஒக்டோபர் 5 ஆம் திகதியன்று உலகமெங்கும் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் பிர்ஸாதா, யாஷிகா ஆனந்த், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் வாரிசான சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

நோட்டா என்றால் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான தேர்தல் அரசியலின் போது போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரையும் எமக்கு பிடிக்கவில்லை என்றால் நோட்டா என்ற பிரிவை தெரிவு செய்து வாக்களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.