இந்தியா – கேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்கலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தனக்கு 13 முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராயர் ஃபிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் முறைப்பாடு அளித்திருந்தார்.

மேலும் பேராயரை கைது செய்யக்கோரி திருவானந்தபுரத்தில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பேராயர் கேரளா குற்றப்புலனாய்வு பிரிவில் நேற்று முன் தினம் ஆஜரானார்.

கடந்த இரண்டு நாட்களில் பேராயரிடம் 15 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் பொலிஸ் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு இன்று கைது செய்தது

பேராயரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வழி ஏற்பட பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆங்கு பேராயருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.