ஈரானின் அஹ்வாஸ் நகரில் இராணுவ அணிவகுப்பொன்றின் போது  இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் கொல்லப்;பட்டுள்ளனர்.

இராணுவஅணி வகுப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை சீருடையணிந்த நபர்கள் பூங்காவொன்றிற்குள்ளிலிருந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகின்றன

துப்பாக்கி பிரயோகம் பத்து நிமிடங்கள் வரை நீடித்தது ஆனால் நிலைமை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இஸ்லாமிய தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

காயமடைந்த படையினர் காப்பற்றி கொண்டு செல்லப்படும் படங்கள் வெளியாகியுள்ளன