வவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளது. உலக சமாதான தினத்தை முன்னிட்டு இன்று காலை 8.30மணியளவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இளைஞர்கள, மாணவர்கள் தகவல் நிலையத்தின் இலங்கைக்கான தலைவர்  சா. சர்ராஜ் தலைமையில் சர்வதேச சாமாதன நிகழ்வுகள் இடம்பெற்றது.


சமாதானத்திற்காக உரிமை எனும் தொனிப் பொருளில் இடம்பெறும் சர்வதே சமாதான தினம் சர்வ மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது. நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே. காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இலங்கைக்கான சாமாதானப் பேரவையின் செயலாளர் நாயகம் வைத்தியர் சூழா சேனரட், பாடசாலையின் அதிபர், முன்னாள் பிரதி அதிபர், கல்வியியலாளர்கள், மாணவர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.