வரலாற்றிலேயே சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்களை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்ற அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பீடமேறிய பின் விஷன் 2030 என்ற பெயரில் சவுதி அரேபிய சமூகத்தை நவீனமயமாக்கும் நோக்கில் வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு இருந்த தடையை நீக்கினார்.

கடந்த ஏப்பிரல் மாதம் 18ஆம் திகதி முதல் திரையரங்குகளை செயற்படுத்தினார்.

இந் நிலையில் அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை நேரத்தில் மாத்திரம் வீம் ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மானின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு பல்வேறு நாடுகளிலுள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும் விஷன் 2030 திட்டத்தின் கீழ் இளவரசர்  இன்னும் பல புரட்சிகரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என சவுதி பெண்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.