பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரால் பரபரப்பு

Published By: Digital Desk 4

22 Sep, 2018 | 11:42 AM
image

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பொறியியல் மாணவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அமெரிக்காவில் புளோரிடா தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியியல் படிக்கும் 22 வயது மாணவர் நிஷால் சாங்கட் அவர் கடந்த 20 ஆம் திகதி  ஒர்லண்டோவில் உள்ள மெல்பல்ன் சர்வதேச விமான நிலைய பகுதிக்கு காரில் சென்றுள்ளார்..

விமான நிலையத்தின் வெளியே 140 மீட்டர் தூரத்தில் காரை நிறுத்திய பின் விமான நிலையத்தின் மதில் மீது ஏறி உள்ளே குதித்தார்.

அங்கு ‘ஏர்பஸ்-321’ ரக பயணிகள் விமானம் தயாராக நின்று கொண்டிருந்தது. அதற்குள் நுழைந்த அவர் விமானியின் அறைக்குள் நுழைந்து அதை இயக்க முயன்றார்.

உடனே விமானத்தில் இருந்த 2 தொழில்நுட்ப நிபுணர்கள், 2 பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

விசாரணையில், நிஷால் டிரினிடாட்டை சேர்ந்தவர் என்றும், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் சரக்கு விமானம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். ஆனால் பயணிகள் விமானம் ஓட்ட தகுதி பெற வில்லை. இந்நிலையில் அவரது வீடு மற்றும் காரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் எதுவும் இல்லை. எனவே அது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர் நிஷால் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் விமானத்தை திருட முயன்றதாக நிஷால் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊழியர் ஒருவர் சீட்டிங் விமான நிலையத்தில் இருந்து விமானத்தை கடத்திச் சென்று ஒரு தீவில் மோதி விபத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17