மாலைதீவில் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

மாலைதீவு மீண்டும் சர்வாதிகார ஆட்சியின் பிடியில் சிக்குகின்றது என்ற அச்சத்தின் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி அப்துல்லா யமீனை பதவியிலிருந்து அகற்றும் நோக்குடன் எதிர்கட்சிகள் மாபெரும் கூட்டணியொன்றை  ஏற்படுத்தியுள்ளன.

தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக இம்ராஹிம் முகமட் சொலி என்பவரை எதிர்கட்சிகள்  நிறுத்தியுள்ளன.

அப்துல்ல யமினீன் அரசாங்கம் ஊழல் எதிர்கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைப்பது உட்பட  ஏதேச்சாதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை கொண்ட தேசியவாதியாக தன்னை முன்நிறுத்துகின்றார்.

அவர் தனது காலத்தில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து சுட்டிக்காட்டிவருகின்றார்.

மாலைதீவு ஜனாதிபதியின் அபிவிருத்தி திட்டங்களிற்கு சீனாவே பெருமளவு நிதியை வழங்கிவருகின்றது.

இதன் காரணமாக மாலைதீவு சீனாவின் செல்வாக்கின் கீழ் சிக்கலாம் என மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவின் தலைநகரில் எதிர்கட்சிகளிற்னு ஒரேயொரு பேரணியை மாத்திரம் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மாலைதீவு சமீபத்தில் சந்தித்த தேர்தல்களில் இதுவே அதிகளவு வெளிப்படை தன்மையற்றதாக மாறலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பான நடைமுறைகள் தீடிரென இவ்வாரம் மாற்றப்பட்டுள்ளன என அவை குறிப்பிட்டுள்ளன.

ஜனாதிபதி யமீன் எந்த வழிமுறையை பயன்படுத்தியாவது அதிகாரத்தை தக்கவைக்க முயல்கின்றார் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.