அரசாங்கத்தின் இயலாமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

நாடு தற்போது அதலபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்துதுறைகளுமே மிகவும் மோசமான வீழ்ச்சிகளையும் நிர்வாக சீர்கேடுகளையும் சந்தித்துள்ளன.இவ்வாறானதொரு நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது,தற்போதைய அரசாங்கத்தினால் முடியாத காரணமாகும். எனவே, தேர்தல் ஒன்றின் ஊடாக தீர்வுகாண முடியும்.