இந்தியா – பாகிஸ்தான் வெளியறவு அமைச்சர்களிடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இந்திய மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று நிவ்யோர்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்த நிலையிலேயே பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 3 இந்திய பொலிஸார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாலும் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியை புகழும் வகையில் பகிஸ்தான் அஞ்சல் தலை வெளியிட்டதை அடுத்தே பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.