ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரம்பாதெனிய பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 05 பேர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த தனியார் பஸ் ஒன்றும் சீதுவையிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாவிற்க்கு  பயணிகளை ஏற்றிசென்ற வேன் ஒன்றும் கினிகத்தேன ரம்பாதெனியா பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த விபத்து .சனிக்கிழமை காலை 07 மணி அளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

அதிகவேகத்தில் பயனித்த தனியார் பஸ்ஸின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சீதுவையில் இருந்து சுற்றுலா சென்ற வேனில் 11 பேர் பயணித்த நிலையில் இதில் ஐவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது