மோடி நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார் : ராகுல்

Published By: Daya

22 Sep, 2018 | 10:38 AM
image

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை என அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சாதமாக செயற்பட்ட ரகசியத்தை வெளியிட்டதற்காக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,  ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். 

ஹலாண்டேவிற்கு நன்றி, பிரதமர் தனிப்பட்ட முறையில் ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை அம்பானிக்கு வழங்கியுள்ளார் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்துவிட்டது.

 பிரதமர், இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டார். இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை செய்துள்ளார் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13