(ஆர்.யசி)

மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினரால் மேலும் 2 மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே  அந்த குழுவினரால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது மீளாய்வு குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையென்றால் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.