ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி அமைப்பாளர்களும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களும் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். 

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

அமைச்சர் பைஸர் முஸ்தபா- மத்திய கொழும்புக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சி தொகுதி அமைப்பாளர்

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹெக்டர் பெத்மகே - கடுவெல தொகுதியின் இணை அமைப்பாளர்

முன்னாள் நகர பிதா ஜீ.எச்.. புத்ததாச- கடுவெல தொகுதியின் இணை அமைப்பாளர்

பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன- கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின   இணை தலைவர்

திருமதி. சுமித்ரா பிரியங்கனி அபேதீர- மத்துகம தொகுதியின் மத்துகம பிரதேச செயலக   பிரிவுக்குப் பொறுப்பான இணை அமைப்பாளர். 

சுரங்க பிரஷான் ஹிதெல்லஆரச்சி- மத்துகம தொகுதியின் தொடங்கொட பிரதேச  செயலக பிரிவிற்கு பொறுப்பான இணை   அமைப்பாளர் மற்றும் தொடங்கொட பிரதேச  ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்.

அமைச்சர் பியசேன கமகே - காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்   இணை தலைவர்

அமில ஹர்ஷன காரியவசம்  -பெந்தர\ எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் மற்றும் பெந்தோட்டை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்

என்.டீ.சுசந்த லால் ஜயவீர - கரந்தெனிய தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்  

திசர குனசிங்க- ஹபராதுவ தொகுதி அமைப்பாளர் மற்றும்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை   தலைவர் 

அதுல குமார ராஹுபத்த - இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்  இணை தலைவர் மற்றும் இரத்தினபுரி தொகுதிக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்  

தயாசிறி ஜயசேக்கர- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல்  மாவட்ட தலைவர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர் மற்றும் பன்னல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர் 

வைத்தியர் கீர்த்தி பொன்சேக்கா- யாபஹூவ தொகுதி அமைப்பாளர் மற்றும்  அப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்  

ஏ.எச்.எம். நாஹீர் - முந்தலம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்