அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தல் தொடர் பில் குடி­ய­ரசுக் கட்­சியின் முன்­னணி வேட்­பா­ள­ரா­க­வுள்ள டொனால்ட் டிரம்ப் இஸ்லாம் அமெ­ரிக்­காவை வெறுக்­கி­றது என்ற சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை வெளி­யிட்­டுள்­ளமை குறித்து அவ­ரது கட்­சியைச் சேர்ந்த போட்டி வேட்­பா­ள­ரான மார்கோ ரூபியோ கடும் கண்­டனம் தெரி­வித்­துள் ளார்.

மியா­மியில் இடம்­பெற்ற தொலைக்­காட்சி மூலம் நேரடி ஒளிப­ரப்புச் செய்­யப்­பட்ட விவாத நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை புளோ­ரிடா மாநி­லத்தில் இடம்­பெ­ற­வுள்ள மாபெரும் வாக்­கெ­டுப்பில் தேர்­த­லுக்­கான போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­கு­வதா இல்­லையா என்ற பாரிய சவாலை மார்கோ ரூபியோ எதிர்­கொண்­டுள்ளார்.

இஸ்­லாத்தில் அடிப்­ப­டை­வாத பிரச்­சி­னை­யொன்று உள்ள போதும், பல முஸ்­லிம்கள் பெரு­மைக்­கு­ரிய அமெ­ரிக்­கர்­க­ளா­க­வுள்­ளனர் என மார்கோ ரூபியோ .கூறினார்.

"ஜனா­தி­ப­திகள் தமக்கு என்ன வேண்டும் என்­பதைக் கூற முடி­யாது. ஏனெனில் அவ்­வாறு கூறு­வது பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­தாகும்" என அவர் தெரி­வித்த போது அவ­ரது கருத்­துக்கு வர­வேற்­ப­ளிக்கும் வகையில் கூட்­டத்­தினர் பலத்த கர­கோசம் செய்­தனர்.

குடி­ய­ரசுக் கட்சி வேட்­பா­ள­ர்­க­ளி­டையே இஸ்லாம் தொடர்­பான கருத்தில் கடும் வேறு­பா­டுகள் நிலவி வரு­கின்­றன. தீவி­ர­வா­தி­களின் குடும்­பங்கள் கொல்­லப்­பட வேண்டும் என்ற டொனால்ட் டிரம்பின் கருத்­துக்கு அவ­ரது கட்­சியைச் சேர்ந்த ஏனைய 3 வேட்­பா­ளர்­களும் கடும் எதிர்ப் பைத் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த விவாத நிகழ்ச்­சிக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் சி.என்.என். ஊட­கத்­துக்கு அளித்த பேட்­டியில், இஸ்லாம் அமெ­ரிக்­காவை வெறுப்­ப­தாக சர்ச்­சைக்­கு­ரிய கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

“இஸ்லாம் எம்மை வெறுக்­கி­றது என்றே நான் நினைக்­கிறேன். அங்கு பிர­மாண்­ட­மான வெறுப்­பொன்று உள்­ளது" என அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புளோரிடா, இலினொயிஸ், மிஸோரி, வட கரோலினா, ஒஹியோ ஆகிய பிராந்தியங்களில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கான உட்கட்சி வாக்கெடுப்புகள் நடை பெறவுள் ளன.