வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பை குளத்தில் இன்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளது.

இதனை அவதானித்துள்ள ஊர்வாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கபட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

சட்டவைத்திய அறிக்கையின் படி  வெங்காய வெடி என்று எனப்படும் வெடிபொருளை உண்டமையினாலேயே குறித்த யானை  உயிரிழந்ததாக சட்டவைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டது.