(ஆர்.விதுஷா )

பேலியகொட  - மீகஹவத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடமிருந்து 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

பேலியகொட  பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. 

மேற்படி சந்தேக நபர் நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டுள்ளதுடன பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.