(எம்.சி.நஜிமுதீன்)

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு முஸ்லிம் காங்கிரஸின் கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே அவர் முஸ்லிம் காங்கிரஸ{டன் இணைந்துகொள்ள விரும்பினால் அவரை அன்புடன் வரவேற்போம். 

மாறாக அவரின் வருகைக்கு எவரும் தடங்கலாக இருக்கப்போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ்  கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் அதியுயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து நேற்று  இராஜினாமாச் செய்துள்ளார். 

இந்நிலையில் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளவுள்ளதாக சில தரப்பு தெரிவித்துள்ளன. ஆகவே அது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.