(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் சூட்சுமமான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. அதன் ஓர் அங்கமாகவே சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைக்கு மாற்றமாக செயற்படும் இவர்கள், கட்சியை கீழ்மட்டத்துக்கு கொண்டு செல்லும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமே சிரேஷ்ட உறுப்பினர்கள் அவர்களது தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் கட்சியை அதல பாதாலத்துக்கு கொண்டு செல்வதே இவர்களின் இறுதி நடவடிக்கையாகும் என்றார்.