(எம்.மனோசித்ரா)

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வடக்கிற்கு சென்று அரசியல் கைதிகளை விடுவிப்பதாக பொய் வாக்குறுதி அளித்து அம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம், நாட்டில் காணப்படும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க மறுப்பதைப் போன்றே இந்த பிரச்சினைக்கும் தீர்வினை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்கைதிகளின் போராட்டம் 7 நாட்களை கடந்துள்ள நிலையில் அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும். இவ்வாறு மௌனம் காப்பதன் மூலம் அரசாங்கம் இந்த விடயத்தை மூடி மறைக்க முயற்சிக்கின்றது. 

அவ்வாறு மூடி மறைக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது. அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்ர முதலிகே தெரிவித்தார்.

கொழும்பு சமூக, சமய நடுநிலையத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.