(இராஜதுரை ஹஷான்)

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அல்லது  கட்சியின் உறுப்பினர் களமிறக்கப்படலாம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  கட்சிக்குள் தற்போது எவ்விதமான  கருத்து வேறுப்பாடுகளும் காணப்படவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 பொது எதிரணியினர் யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவார்கள் என்பதே தற்போது பேசுபொருளாக காணப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களை தவிர  அக்கட்சியின்  பிறிதொரு உறுப்பினர்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாதா என தெரிவித்தார்.

 ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொதாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும்  குடும்ப ஆட்சியினை  உருவாக்கவே முயற்சிகளை மேற்கொள்கின்றார் . தன் சகோரதர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று அவர்  குறிப்பிட்டமையினால் அக்கட்சிக்குள் கருத்து வேறுப்பாடுகள்  உருவாகியது .  

குடும்ப ஆட்சியினை ஏற்படுத்துவதிலே மஹிந்த உறுதியாக உள்ளார்.  ஆகவே  ஐக்கிய தேசியக் கட்சி சாதாரண உறுப்பினரை கூட ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கலாம்.  குடும்ப ஆட்சியினை உருவாக்குவது எமது நோக்கமல்ல  என்றார்.