பொலிஸ் அதிகாரியாக நடித்து வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியவர் கைது - காரணம் இதுதான்..!

Published By: R. Kalaichelvan

21 Sep, 2018 | 04:54 PM
image

பொலிஸ் அதிகாரி போன்று நடித்து பெண் ஒருவரிடம் வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கிய நபர் ஒருவரை சிலாபம்பொலிஸார் கைது செய்துள்ளனர்.சிலாபம் கஞ்சிகுழிய தேவாலய வத்த பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிலாபம் மாவத்த பகுதியில் பெண்ணொருவர் வசித்து வந்துள்ளார். நேற்று திடீரென குறித்த வீட்டுக்கு ஆண் ஒருவர் சென்றுள்ளார்.

இதன்போது தான் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்பொலிஸ் அதிகாரி எனவும், வெளிநாட்டில் தொழில்புரியும் உமது கணவர் நகைக் கடை ஒன்றில் கொள்ளையிட்டு சிக்கி கொண்டுள்ளதாகவும் இதனை தெரியப்படுத்தவே தான் வந்தாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தனது கணவனின் திருட்டு சம்பவம் தொடர்பில் தெரிந்து கொண்டேன் என உறுதிப்படுத்த இந்த தாளில் கையொப்பம் இடுமாறு வெற்றுத்தாளை நீட்டியுள்ளார்.

குறித்த நபரின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட பெண், கையொப்பமிட மறுத்துள்ளார். எனினும் அச்சுறுத்தி கையொப்பத்தை இட வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் உடனடியாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதோடு கையொப்பம் பெறப்பட்ட அந்த வெற்றுத்தாளையும் மீட்டுள்ளனர்.

வெற்றுத்தாளில் ஏதோ சில விடயங்களை குறித்த நபர் எழுதியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27