14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று ஆரம்பமாகவுள்ள 'சுப்பர்- 4'  சுற்றில் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா, பங்களாதேஷ் அணிகளும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளன.

நேற்று நடைபெற்று முடிந்த போட்டியுடன் தொடரின் லீக் ஆட்டம் நிறைவுக்கு வர,  'சுப்பர்- 4' சுற்று இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த 'சுப்பர்- 4' சுற்றில் மொத்தம் 6 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதன்படி இன்று மாலை 5.00 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ள 'சுப்பர்- 4' சுற்றின் முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.