பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே யுத்த வெற்­றியை அறி­வித்தோம். இறுதி யுத்­தத்தின் பின்­னரும் பிர­பா­கரன் உயி­ரோடு இருக்­க­வில்லை. பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா பாரா­ளுமன்­றத் தில் பொய்­யான வர­லாற்றை கூறு­கின்றார் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அப்­போ­தைய பாது­காப்பு தரப்பு பேச்­சா­ள­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அழுத்­தமும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தூண்­டு­த­லிலும் வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்று பொன்சேகா கூறு­கின்றார். இந்த விவ­கா­ரத்தில் உண்­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தால் இந்த குற்­ற­ச்சாட்டில் முதல் குற்­ற­வா­ளி­யாக சரத்பொன்­சே­காவே சிக்­குவார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இறுதி யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் பிர­பா­கரன் உயி­ருடன் இருந்தார் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான சரத் பொன்­சேகா

பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள நிலை யில் இந்த விடயம் தொடர்பில் அப்­போ­தைய

பாது­காப்பு தரப்பு பேச்­சா­ள­ராக

செயற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெ­ல­விடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

சரத் பொன்­சேகா என்ற நபர் ஒரு நல்ல அர­சியல் வாதியோ அல்­லது நல்ல இரா­ணு­வத தள­ப­தியோ அல்ல. அவர் எந்த நிலை­யிலும் விலை­போ­கக்­கூ­டிய நபர். அவர் பல­மான நப­ரா­கவோ மக்­களின் ஆத­ரவை பெற்­றி­ருந்த நப­ரா­கவோ இருந்­தி­ருந்தால் கடந்த 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெற்­றி­ருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்­தலில் அவர் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டு மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். யுத்தம் நடை­பெற்ற கால­கட்­டத்தில் அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­துள்ளார். ஆனால் யுத்­தத்தை முன்­னெ­டுத்து சென்­றுள்ளார் என்று கூறு­வதை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவர் மாத்­திரம் தலைமை தாங்கி யுத்­தத்தை முடிக்­க­வில்லை. எமது அர­சாங்கம் வழி­ந­டத்­தி­யது. பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ வழி­ந­டத்­தினார். மாறாக சரத் பொன்­சே­காவை என்ற தனி நபர் மாத்­திரம் யுத்­தத்தில் நாய­க­னாகப் பார்க்­கின்­ற­மையை ஒரு­போதும் ஏற்­று­கொள்ள முடி­யாது.

சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்கள் அனைத்தும் பொய்­யா­ன­வை­யாகும். அதேபோல் பார­ளு­மன்­றத்தில் அவரின் உரையை அவ­தா­னிக்கும் போதும் அதில் முழு­மை­யாக மஹிந்த ராஜபக் ஷ மீதும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் மீதும் வைராக்­கி­யத்­து­டனும் பழி­வாங்கும் நோக்­கத்­து­டனும் மாத்­தி­ரமே உள்ளார் என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வாத இயக்­கத்தை பலப்­ப­டுத்தும் வகையில் ராஜபக் ஷ குடும்பம் பணம் கொடுத்­த­தா­கவும் பசில் ராஜபக் ஷ புலி­களை பலப்­ப­டுத்தி செயற்­பட்டார் என்று கூறு­வதும் முழு­மை­யான பொய்­யாகும். இதை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். பசில் ராஜபக் ஷவோ அல்­லது கோத்­த­பாய ராஜபக் ஷவோ புலி­க­ளுடன் நெருக்­கத்தை பேணி­யி­ருந்தால் அப்­போதே அவர் இதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். நாட்டின் மீதும் இரா­ணு­வத்தின் மீதும் பற்று கொண்ட நபர் ஏன் அப்­போது இந்த உண்­மை­களை மறைக்க வேண்டும். அப்­ப­டி­யாயின் அவரும் புலி­க­ளுக்கு உடந்­தை­யாக செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

வெள்­ளைக்­கொடி விவ­காரம்

மேலும் வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்று கூறு­கின்றார். இந்த விவ­கா­ரத்தில் உண்­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தால் இந்த குற்­ற­சாட்டில் முதல் குற்­ற­வா­ளி­யாக சரத் பொன்­சே­காவே சிக்­குவார். அவரின் தலை­மையில் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய குற்றம் இது­வென்­பதை என்­பதை மறந்­து­விட்டோ அல்­லது இந்த விவ­கா­ரத்தில் அவர்­மீது இருக்கும் குற்­றங்­களை மறைத்­து­விட்டோ வேறு ஒரு வகையில் செயற்­பட பார்க்­கின்­றனர்.

மஹிந்த, கோத்­த­பாய ராஜபக் ஷ ஆகி­யோரை பழி­வாங்கும் எண்­ணத்தில் அவர்­களை போர்க்­குற்­ற­வா­ளிகள் என்று சர்­வ­தேச ரீதியில் தண்­டிக்கும் முயற்­சியில் அப்­பாவி இரா­ணு­வத்­தையும் சேர்த்து தண்­டிக்­கவே முயற்­சிக்­கின்­றனர். மிகவும் மோச­மான பயங்­க­ர­வா­தி­க­ளுடன் போரிடும் போதும் பல இலட்சம் தமிழ் மக்­களை வடக்கில் இருந்து காப்­பாற்றும் மனி­தா­பி­மான போராட்­டத்­தின்­போதும் ஒரு சில தவ­றுகள் நடை­பெறும். அதை தவிர்க்க முடி­யாது.

இந்த கருத்தை பல்­வேறு நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர். டெஸ்மன் டி சில்வா தனது அறிக்­கை­யிலும் இந்த கார­ணத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஆனால் இவ்­வா­றான சிறு­சிறு கார­ணி­களை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு மனித உரிமை மீறல்கள் நடந்­தே­றி­யது என கூறு­வதை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

இப்­போது அவர் கூறும் கார­ணங்கள் அனைத்­தி­னதும் பின்­ன­ணி­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அழுத்­தமும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தூண்­டு­தலும் உள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி, சர­வ­தேச தரப்பு மற்றும் புலம்­பெயர் புலி­களின் கட்­ட­ளைக்கு அடி­ப­ணிந்து இன்று மஹிந்த தரப்­பையும் இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுக்கும் செயலை செய்து வரு­கின்றார். ஐக்­கிய தேசியக் கட்சி மேற்­கொள்ளும் மிகப்­பெ­ரிய சூழ்ச்சித் திட்டம் இப்­போது அரங்­கேறி வரு­கின்­றது.

பிர­பா­கரன் உயி­ரோடு இருக்­க­வில்லை.

மேலும் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் உயி­ருடன் இருந்தார் என சரத் பொன்­சேகா தெரி­வித்­த­மையும் பொய்­யான கருத்­தாகும். பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டது உறு­தி­யான பின்­னரும் கொல்­லப்­பட்­டது அவர் தான் என பல தட­வைகள் உறு­திப்­ப­டுத்­திய பின்­ன­ருமே நாம் யுத்த வெற்­றியை அறி­வித்தோம்.

ஆனால் பிர­பா­கரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா அங்கு இருக்கவில்லை. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் யுத்த வெற்றியை தெரிவித்த பின்னரே சரத் பொன்சேகா அறிந்துகொண்டார். இவ்வாறு பல உண்மைகளை அறியாது பொய்யான காரணிகளை பாராளுமன்றத்தில் தெரிவிப்பதனால் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டு விடாது. இப்போது உள்ள நிலையில் ரணிலின் அடிமையாகவே இவர்கள் அனைவரும் செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக் ஷவையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் சரத் பொன்சேகா செயற்படுகின்றார். அடிமட்ட நிலைக்கு அவர் இறங்கியுள்ளார் என்றார்.