முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில் காணிப்­பி­ணக்குத் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்­பாக செயற்­பட்டமை தொடர்பில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் அதி­காரி, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார வைத்­தி­ய­சாலை வைத்­திய அத்­தி­யட்­சகர், முல்­லைத்­தீவு மாவட்ட பொது மருத்­து­வ­மனை பணிப்­பாளர் ஆகி­யோ­ரிடம் நேற்று மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

புதுக்­கு­டி­யி­ருப்பு 7 ஆம் வட்­டா­ரத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி காணிப்­பி­ரச்­சினை கார­ண­மாக இரண்டு தரப்­புக்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் இருவர் காய­ம­டைந்­தனர். 

இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த  புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸாரும் வைத்தியசாலையில் அதி­கா­ரிகள் சிலரும் இணைந்து உண்­மைக்குப் புறம்­பான தக­வல்­களை வெளிப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை திசை திருப்­பி­யுள்­ளமை தொடர்பில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இச் சம்­பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் பதி­வு­செய்­யப்­பட்ட முறைப்­பாடு தொடர்பில் நேற்று முன்­தினம் கிளி­நொச்­சியில் அமைந்­துள்ள யாழ்.பிராந்­திய மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அலு­வ­லகத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அதி­காரி, முல்­லைத்­தீவு உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர், புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை பணிப் பாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.