பாடசாலையில் முன்பகுதியில் அமைக்கப்படும் புதிய கட்டடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் முன்பகுதியில் பாரிய மாடிக்கட்டடம் ஒன்று அமைய இருப்பதாகவும், மேல்மாடியில் திருமண மண்டபம் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“நீதி தேவதையே உன் பிள்ளைகள் இன்று வீதியில் நிற்கின்றோம், எம் கல்வியை விற்க நீ யார், பழைய மாணவர்களே எம்முடன் இணையுங்கள் மண்டபம் கட்டுவதை உடன் நிறுத்துங்கள், மண்டபம் தேவையில்லை” உள்ளிட்ட பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.