மாரவில - முதுகடுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரு குழுக்கழுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்கமே இந்த துப்பாக்கிச் சூட்டுக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.