இந்தியாவில், அருகே நந்தி நகரில் கடந்த திங்கட் கிழமையன்று, கோபி என்ற இளைஞர்  இரவு மிகவும் தாமதாக குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.

தன் மகனுக்கு உணவு பரிமாறிய கோபியின் தாய், மேலும் சில வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டார்.

இன்னும் கொஞ்சம் சாதம் வேண்டுமென கேட்டு உறங்கிக் கொண்டிருந்த கோபி மீண்டும் தனது தாயை எழுப்பினார். அப்போது தங்கை ராணி வந்து சாதம் எடுத்து கோபிக்கு பரிமாறியுள்ளார். மூன்றாவது முறை சாதம் வேண்டுமென கோபி கேட்டபோது, சமையலறையில் போய் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி ராணி கூறியிருக்கிறார்.

இதனால் மிகவும் கோபம் அடைந்த கோபி, தன் தங்கையை கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்துள்ளார். வலி தாங்காமல் அலறிய ராணியின் குரல் கேட்டு உறக்கம் கலைந்த தாய், வேகமாக குறுக்கிட்டு கோபியை தடுத்துள்ளார்.

அப்போது கோபி தனது தாயின் தலையிலும் மட்டையினால் ஓங்கி அடிக்கவே, பலத்த காயம் ஆளான குறித்த தாய் துடிதுடித்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தாயையும் மகளையும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து உயிருக்குக் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  கோபியின் தாயார், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு கோபி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்தபோது கோபியின் மனைவி ஜெயந்தி அங்கு வந்திருந்ததாகவும் பின்னர் அவர் உடனடியாக தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது’’ என போலீஸார் தெரிவித்தனர்.