பிரான்ஸ் - ரோயன் நகரில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ரோயன் நகர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பாதிரியாராக இருந்த ஜீன் பாப்ஸ்டிக் செபே இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என ஆர்ச் பிஷப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே பாதிரியார் ஜீன் பாப்ஸ்டிக் செபே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இத் தகவலை ரோயன் கிறிஸ்தவ திருச்சபை உறுதி செய்துள்ளது.

அண்மைக்காலங்களில் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்த பாதிரியார்கள் மீது அதிகப்படியான பாலியல் புகார் எழுந்தவாறு உள்ளன.

அமெரிக்கா – பென்சில் வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 1000 சிறுவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக 300 பாதிரியார்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.