பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஒழுங்குவிதிகளை மீறியமையினால் இவர்களுக்கு எதிராக பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமல்வீரவன்சவுக்கு இரண்டு வாரகால தடையும், பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரகால தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.