ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் ஐந்து பேர் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க.வின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

அந்த வகையில் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, லக்ஷமன் யாப்பா அபேவர்தன, சந்திம வீரக்கொடி ஆகியோர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.