பங்களாதேஷ் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இறுதித் தருணங்களில் ரஷித்கான், நைய்ப்பின் அதிரடி ஆட்டத்தினால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக மெஹாமட் ஷஹ்சாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் களமிறங்கி 10 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது 1.4 ஆவது ஓவரில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

அதன்படி நான்கு பந்துகளை எதிர்கொண்ட ஜனாத் இரண்டு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 8 ஓட்டத்துடன் அபு ஹைடருடய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பையடுத்து ரஹ்மத் ஷாவும் 10 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு பொல்ட் முறையில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 5.5 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்பின் களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹதி, மெஹாமட் ஷஹ்சாத்துடன் இணைந்து ஜோடி சேர்ந்தாட ஆப்கானிஸ்தான் அணி 16 ஓவர்களுக்கு 60 ஓட்டங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து 19.3 ஆவது ஓவரில் அணியின்  ஓட்ட எண்ணிக்கை 79 ஆக இருந்தபோது மெஹாமட் ஷஹ்சாத் 37 ஓட்டத்துடன் ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்து 25 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடக்க 25.1 ஆவது ஓவரில் அஸ்கர் ஆப்கான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த சாமிமுல்லா ஷேவாரி 18 ஓட்டங்ளுடன் ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 36 ஆவது ஓவரின் இறுதியில் 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக அரைசதம் கடந்தது ஆடி வந்த ஹஷ்மத்துல்லா ஷஹதியும் 37.1 ஆவது ஓவரில் 58 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவரையடுத்து களம்புகுந்த மெஹமட் நைய்பி 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து குல்பாடின் நைய்பியுடன் ஜேடி சேர்ந்து ஆடி வந்த ரஷித் கான் 45 ஆவது ஓவரில் 2 நான்கு ஓட்டத்தையும் ஒரு ஆறு ஓட்டத்தையும் பெற்று அதிரடி காட்ட 45 ஆவது ஓவரின் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்தும் பங்களாதேஷ் அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் தெறிக்க விட ரஷித் கான் இறுதி ஓவரில் அரை சதம் கடந்தார். 

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரஷித் கான் 32 பந்துகளில் 57 ஓட்டத்தையும் நைய்ப் 38 பந்துகளுக்கு 42 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர். 

இதன்மூலம் பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்காக 256 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுக்களையும், அபு ஹேடர் ரோனி 2 விக்கெட்டுக்களையும், ஹுசேன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.