எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி

டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமை தொடர்பாக நேற்று ஆளும் , எதிர்க்கட்சியினருக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் சபையில் இடம்பெற்றன. 

இதன்போது கூட்டு எதிரணியும்  மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை கடுமையான சாடியதுடன் முன்னைய ஆட்சியின் கொள்கையினாலும் உலக பொருளாதார நிலைமைகளினாலுமே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டதாக ஆளும் கட்சியினர் சபையின் அவதானத்துக்கு கொண்டு வந்தனர்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விமான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கட்டளைகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின்  கீழ் அறிவித்தல்கள், சேர் பெறுமதி சேர் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளும் , எதிர்க்கட்சியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.