அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட தமது பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,

நாங்கள் 1965 இல் இருந்து பூர்வீகமாக இக் காணில் வாழ்ந்து வந்த நிலையில், யுத்தம் காரணமாக இப் பகுதியிலிருந்து வெளியேறினோம். இக் காணிகளில் மீண்டும் குடியேற நாங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அச்சம் காரணமாக குடியேற முடியாது போனது.

இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களிடம் பல முறைபாடுகளை முன்வைத்த போதும் அவை பலனளிக்கவில்லை.

அத்துடன் தற்போது சுமாமர் 30 குடும்பங்களைச் சேர்ந்தோர் காணியில்லாமல் நிர்க்கதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவக்க‍ை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.