(ஆர்.விதுஷா)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
' டெங்கு அற்ற நாடு " என்ற தொனிப் பொருளின் கீழ் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசந்த திசேறா தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள சுகாரதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எனினும் தற்போது நிலவும் பருவபெயர்ச்சி காலநிலை காரணமாக எதிர்வரும் 3 மாதங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
எனவே டெங்கு நோய் தடுப்பிற்கான இரண்டாவது செயற்திட்ட பணிகளில் பல்வேறு நடைமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக சுற்று சூழலுக்கு நேயமான பணிகளை முன்னெடுத்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM