( எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

முன்னைய ஆட்சியில் மோசடி செய்தவர்களுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்கவில்லை.ஆனால் இந்த ஆட்சியை கொண்டுவர முனைந்த எமக்கு எதிராகவே தண்டனையும் வழக்குகளும் தொடுக்கப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சபையில் தெரிவித்தார்.அத்துடன் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றார். 

அவர் இலங்கை பொருளாதாரம் பற்றி சிந்திக்க மாட்டார். உலக பொருளாதார நெருக்கடியை பார்த்து நடப்பதாயின் எதற்கு அரசாங்கம், எதற்கு மத்திய வங்கி உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று விமான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கட்டளைகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின்  கீழ் அறிவித்தல்கள், சேர் பெறுமதி சேர் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அனைத்து காரணங்களையும் உலக நிலைமையின் மீது பழி சுமத்துவதனை ஏற்க முடியாது. ஆகவே ரூபாவின் பெறுமதி அதிகரிக்க வேண்டும். அதனை கொண்டே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.